Friday, January 14, 2011

வெள்ளத்தில் பொங்கல்


 
பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்புக்கு பொருட்கள் வாங்க வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்புக்கு பொருட்கள் வாங்க வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொங்கல் பண்டிகையும் களையிழந்து போயுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வியாழனன்று மழை ஓய்நிதிருந்தது என்றாலும், வெள்ளியன்று மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் தொடர்ந்தும் அல்லலுற்றுள்ளனர்.
இருப்பினும் அநேகமான இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், ஒரு வார காலத்தின் பின்பு ஒரு சில பிரதேசங்களில தரை வழிப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.
மட்டக்களப்பு நகரில் மககள் நடமாட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது.
தமது நாளாந்தப் பாவனைப் பொருட்களையும் , தைப் பொங்கலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதற்காகவே வெளியிடங்களில் இருந்து மக்கள் நகருக்குள் வந்திருந்தனர்.
தரை வழிப் போக்குவரத்து தொடர்ந்து துண்டிக்கப்ப்ட்டுள்ள விவசாயப் பிரதேசமான படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து வள்ளங்கள் மூலம் பெண்கள் உட்பட அப்பிரதேச மக்களும் மட்டக்களப்பு நகருக்கு வந்திருந்தார்கள்.
ஆனால் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் நொந்துபோயுள்ளனர்.
வழமையாக பரபரப்பாக நடக்கும் பொங்கல் வியாபாரம் இம்முறை இல்லை.
உதவியமைப்புகள் இல்லாததன் விளைவு
இதனிடையே கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டர் அமைப்புகளிடமிருந்து போதியளவு உதவிகள் கிடைக்கவில்லை என பாதிப்பிற்குள்ளான பலரும் கூறுகின்றார்கள்.
சுனாமியின் போதும் யுத்த அனர்த்தத்தின் போதும் இம்மாகாணத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் பல அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
 

No comments:

Post a Comment