இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஹேந்திரசிங் தோனி தலைமையிலான இந்த அணியில் அவர் உள்ளிட்டு 15 பேர் இடம் பெற்றுள்ளனர். விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டூல்கர், கௌதம் கம்பீர், விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அசீஷ் நெஹ்ரா, பர்வீண் குமார், முனாஃப் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், பியுஷ் சாவ்லா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையே மிர்புர் நகரில் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இரவு-பகல் ஆட்டமாக மும்பையில் நடக்கவுள்ளது. | |||||
Monday, January 17, 2011
கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment