இலங்கை வெள்ளம்: ஐநா கவலை | |||||||||
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் கல்முனைப் பகுதிகளில் மழை பெய்வது தற்போது நின்றுவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் சந்திக்கும் அபாயங்கள் அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மழை வெள்ளம் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஐ நாவின் சிறார்கள் நல அமைப்பான யுனிசெப்பின் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் மெர்வின் பிளெச்சர் இந்த வெள்ளம் கிழக்கு மக்கள் தமது வாழ்ககையில் கண்டிராத ஒன்று என்று தெரிவித்துள்ளார். வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பலருக்கு இன்னமும் உரிய வகையில் உதவியேதும் கிடைக்கவில்லை. அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் பலவற்றில் உணவு, குடிநீர், மருந்து, கொசு வலை போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக இருப்பிடங்களிலேயே தங்கியுள்ளனர். தமது இருப்பிடங்களுக்கு திரும்பும் வீதிகளிலும், வீடுகளிலும் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் உடனடியாக அங்கு திரும்பக் கூடிய சூழ்நிலை இல்லை என்று அவர்களில் பலரும் கூறுகின்றார்கள். தற்போது குளிருடன் வீசும் காற்று மற்றும் கடும் குளிர் காரணமாக கால நிலை சீரடைந்து விட்டதாக தங்களால் இன்னுமு் உணர முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். தரை விரிப்புகள், போர்வை, துண்டு போன்றவை வேண்டும் என்ற கோரி்க்கைகளும் வந்துள்ளன. இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களைப் பொறுத்த வரை சமைத்த உணவு தொடர்பான பிரச்சினைகைள அவர்களால் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் ,குழந்தைகளுக்கான பால்மா மற்றும் மருந்துகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் இருப்பதாகக் நிவாரணப் பணியாளர்களும் அங்குள்ள தாய்மார்களும் கூறுகின்றார்கள். மழை வெள்ளத்தினால் இம்மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் அநேகமான பிரதேசங்களில் தரை வழிப் பயணத்திற்கு பதிலாக படகு பயணமே முக்கிய போக்குவரத்தாக காணப்படுகின்றது. இம் மாவட்டத்தில் 1957 ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் தான் பெரு வெள்ளம் என ஏற்கனவே பலராலும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது அதை விட பெரு வெள்ளம் என பெரியவர்கள் கூறுகின்றார்கள். | |||||||||
Thursday, January 13, 2011
U.N worries about flood situation in the East
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment